என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீஸ்காரர் மேலும் ஒரு வழக்கில் கைது

    புதுக்கோட்டை அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீஸ்காரர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ஜாகீர் உசேன் (வயது 38). இவர் வல்லத்திராகோட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை தாக்கியதாக கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் குடும்ப தகராறில் ஜாகீர் உசேன் தனது மனைவி பர்வீனை தாக்கியதாகவும், மாமனாரை அரிவாளால் வெட்டியதாகவும் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலும் போலீஸ்காரர் ஜாகீர் உசேனை கணேஷ்நகர் போலீசார் கைது செய்தனர். கைதான அவரை திருச்சி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இதற்கிடையே போலீஸ்காரர் ஜாகீர் உசேன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×