search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    சிறந்த பல்கலைக்கழகம்: இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 5-வது இடம்

    இந்தியா முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட அரசு பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 5-வது இடம் கிடைத்து இருக்கிறது.
    சென்னை :

    ‘கல்வி உலகம்’ அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை? என்ற அடிப்படையில் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என பட்டியலை வகையிட்டு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட அரசு பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 5-வது இடம் கிடைத்து இருக்கிறது.

    திறன்கொண்ட ஆசிரியர்கள், ஆசிரியர் நலன் மற்றும் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உள்பட 7 அளவுகோலின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கின்றனர். முதல் இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்தியன் அறிவியல் நிறுவனமும், 2-வது இடத்தில் ‘டாடா’ அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும், 3-வது இடத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும், 4-வது இடத்தில் டெல்லி பல்கலைக்கழகமும் பிடித்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 19-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×