என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆட்டோ இயக்க அனுமதி கேட்டு டிரைவர்கள் முற்றுகை- 20 பேர் கைது

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ இயக்க அனுமதி கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. மாநகர பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளது.

    கடந்த 60 நாட்களாக ஆட்டோக்கள் ஓடாததால் ஆட்டோ டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு திரண்டனர். அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர் .அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    தற்போது அரசு அறிவித்துள்ள நான்காவது கட்ட ஊரடங்கில் ஏராளமான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோக்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். தொடர்ந்து ஆட்டோக்கள் ஓடாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய வாழ்வாதாரத்தை காக்க ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் மேலும் நோயாளிகளை ஏற்றிச் சென்ற பல ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விடுவிக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர்.

    அனுமதியின்றி திரண்டதால் போலீசார் ஆட்டோ டிரைவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பலர் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 20 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×