search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது விற்பனை - கோப்புப்படம்
    X
    மது விற்பனை - கோப்புப்படம்

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை - ரூ.14.95 கோடிக்கு மது விற்பனை

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.14.95 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது
    வேலூர்:

    டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை என இரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 72 கடைகளில் 55 கடைகள் நேற்று திறக்கப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 கடைகளில் 15 கடைகள் , ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 88 டாஸ்மாக் கடைகளில் 67 கடைகள் திறக்கப்பட்டன.

    குடி மகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று மது வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    வேலூர் ,திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.4கோடியே 50 லட்சத்திற்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ 3 கோடியே 55 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனையானது.

    வேலூர்,திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 7ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது ஒரே நாளில் ரூ 5 கோடிக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ 3 கோடியே 40 லட்சம் மது விற்பனையானது.7ந் தேதியை விட நேற்று ரூ 35 லட்சம் குறைவாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 215 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள 168 கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நேற்று மட்டும் இந்த டாஸ்மாக் கடைகளில் ரூ 6 கோடியே 90 லட்சத்துக்கு மது விற்பனையானது.

    கடந்த 7 ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ5 கோடிக்கு மது விற்பனையானது.அதை விட ரூ.1 கோடியே 90 லட்சம் அதிகமாக நேற்று மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

    4 மாவட்டத்தில் மொத்தம் ரூ.14.95 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
    Next Story
    ×