என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளி பூபதி (20) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய பூபதி அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள பூபதியிடம் வற்புறுத்தினார்.

    இதையடுத்து பூபதி திடீரென தலைமறைவானார். மாணவி காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பூபதியை கைது செய்தனர்.
    Next Story
    ×