என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருஞ்சிறுத்தை
    X
    கருஞ்சிறுத்தை

    வனவிலங்குகளுக்குள் மோதல்: கருஞ்சிறுத்தை பலி

    வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது என்றும் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் 144 தடை உத்தரவு உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதில்லை. இதன் காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியில் வந்து சுற்றி திரிகின்றன.

    இந்த நிலையில் தட்டன் எஸ்டேட்டில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

    அப்போது அங்கு கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பின்னர் புலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்த கருஞ்சிறுத்தைக்கு 4 வயது இருக்கும். அதன் கழுத்தில் காயம் உள்ளது.

    இதனால் வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×