search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரத்த மாதிரி சேகரிப்பு - கோப்புப்படம்
    X
    ரத்த மாதிரி சேகரிப்பு - கோப்புப்படம்

    மர்ம காய்ச்சலுக்கு மருந்துக்கடை பெண் ஊழியர் பலி - 48 பேரின் ரத்த மாதிரி சேகரிப்பு

    மர்ம காய்ச்சலுக்கு மருந்துக்கடை பெண் ஊழியர் பலியானதை தொடர்ந்து கூடலூரில் 48 பேரின் ரத்த மாதிரி சேகரிப்பு பணியில் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி பானுமதி(வயது35). இவர் அந்த பகுதியில் உள்ள மருந்துகடையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் குணமாகி வீடு திரும்பியதும் மீண்டும் காய்ச்சல் வந்து விடுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அறிந்த சுகாதார துறையினர் கூடலூர் எஸ்.எஸ்.நகர் பகுதிக்கு விரைந்து வந்து அனைவருக்கும் பரி சோதனை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் ரத்தம் மாதிரி சேகரிகப்பட்டது. இதில் 48 பேருக்கு ரத்த மாதிரியும், 18 பேருக்கு சளி மாதிரியும் சேகரிக்கப்பட்டு குன்னூரில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆய்வு முடிவு வந்த பின்னரே எந்த காய்ச்சல் என்பது தெரிய வரும். ஒரு வாரம் இந்த பகுதியை சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ.ராஜ்குமார், நகராட்சி கமி‌ஷனர் பாஸ்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதி மக்களுக்கு நிலவேம்பு பொட்டலங்களை வீடு, வீடாக சென்று வழங்கினர்.

    கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் கூடலூர் எஸ்.எஸ். நகர் பகுதியில் காய்ச்சலுக்கு பெண் இறந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×