என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    தவளக்குப்பம் அருகே கணவருடன் குடும்பம் நடத்த வர மறுத்த பெண் மீது தாக்குதல்

    தவளக்குப்பம் அருகே கணவருடன் குடும்பம் நடத்த வர மறுத்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சர்மிளா (வயது42). இவரது கணவர் எம்பெருமாள் மீனவர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே சர்மிளா கணவரை விட்டு பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் தனது மகள்களுடன் வசித்து வருகிறார். சர்மிளாவிடம் எம்பெருமாளின் உறவினர்கள் சமாதானம் பேசியும் சர்மிளா கணவருடன் குடும்ப நடத்த மறுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்துன்று எம்பெருமாள் அவரது அண்ணன் ராம மூர்த்தி, தங்கை மாரியம்மாள் மற்றும் அவரது கணவர் விஜயகுமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து சர்மிளாவிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த எம்பெருமாளின் அண்ணன் ராமமூர்த்தி, தங்கை மாரியம்மாள், அவரது கணவர் விஜயகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சர்மிளாவையும், அவரது மகள்களையும் தாக்கினர். மேலும் சர்மிளாவை அவரது கணவர் எம்பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சர்மிளா தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×