என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடை சீல்
    X
    கடை சீல்

    கடத்தூர் பகுதியில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு சீல் வைப்பு

    கடத்தூர் பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறியும், சமூக விலகளை கடைபிடிக்காமலும் செயல்பட்ட மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    கடத்தூர்:

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப் படுத்தப்படும் என அரசின் அறிவுரை வழங்கி வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சிறிதும் பாதிக்காத வகையில் அவர்களுக்கான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் கடைகளுக்கு திறக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கடைகளைத் திறக்கலாம் என அரசு உத்தரவு பிரப்பித்துள்ளது.

    இந்த நிலையில் அரசின் அறிவிப்புகளை சிறிதும் மதிக்காமலும், சமூக விலகளை கடைபிடிக்காமலும், பொருட்கள் மீது கூடுதலாக பணம் வைத்து விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து கடத்தூர் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகளில் கடத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், பேரூராட்சி அலுவலர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஜெய்சில் குமார், பேரூராட்சி பணியாளர்கள் மோகன் செந்தில் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ஓட்டல்களில் உணவு பொருட்களை பார்சல் மட்டுமே கட்டி வழங்க வேண்டுமென அறிவுறுத்தியும், அவற்றை மதிக்காமல் சில ஓட்டல்களில் மக்களை அமர வைத்து உணவு பரிமாறி வந்தனர்.

    எலக்ட்ரிக்கடைகள், ஜவுளி கடை மற்றும் கண்ணாடி கடைகள் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு முதற்கட்டமாக அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து திறக்க கூடாது என எச்சரித்தனர்.

    மேலும் இது போன்று செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

    Next Story
    ×