search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்தல்
    X
    தனிமைப்படுத்தல்

    கொரோனா பாதித்த பகுதிக்கு சென்று வந்த 9 பேர் தென்காசியில் தனிமைப்படுத்தப்பட்டனர்

    கிராம மக்கள் போராட்டத்தால் கொரோனா பாதித்த பகுதிக்கு சென்று வந்த 9 பேர் தென்காசியில் உள்ள கல்வி நிறுவனத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    தென்காசி:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது துக்க நிகழ்ச்சிக்காக கடையநல்லூரைச் சேர்ந்த 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 9 பேர் வேன் மூலம் வந்துவிட்டு சென்றனர்.

    போலீசார் மற்றும் சுகாதார துறையினர் அந்த வேனை கடையநல்லூர் ரெயில்வே கேட் அருகே தடுத்து நிறுத்தனர்.

    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த மேலப்பாளையத்திற்கு சென்று வந்ததால் 9 பேரையும் தனிமைப்படுத்தி வைக்க ஆலங்குளம் அருகே அத்தியூத்து பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதிக்கு அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்லூரி முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடையநல்லூரை சேர்ந்த 9 பேரையும் இங்கு வைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக பூங்கோதை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோரும் வந்து பொதுமக்களுக்கு ஆதரவாக போலீசார் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளிடம் பேசினர்.

    இதையடுத்து 9 பேரும் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். 9 பேரையும் அங்கு தங்கவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை- தென்காசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரம் வரை பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட் டத்தை தொடர்ந்ததால் கடையநல்லூரை சேர்ந்த 9 பேரும் அங்கிருந்தும் அழைத்து செல்லப்பட்டனர்.

    தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சில கல்வி நிறுவனங்களின் விடுதிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தயார்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் தென்காசியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் கடையநல்லூரை சேர்ந்த 9 பேரையும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×