என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள் 3 நாள்கள் மட்டுமே அனுமதி
வேலூர் மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள் வாரத்தில் திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய 3 நாள்களில் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
வேலூர் சைதாப்பேட்டையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 45 வயது நபர் இறந்தார்.
வெளிநாடு, வெளிமாநிலம் செல்லாதவருக்கு கொரோனா பரவி இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். இனிமேலும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரும் அலட்சியமாக இருந்தால் நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த இயலாது.
எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவது அவசியமாகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காய்கறிக்கடைகள் இன்று முதல் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மளிகை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியவை வாரத்தில் திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய 3 நாள்களில் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
மருந்துக்கடைகள் தினசரி வழக்கம் போல் இயங்கும். பால் விற்பனை நிலையங்கள் தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் மட்டுமே விற்பனை நடைபெறும்.
கோழி, ஆடு, மீன் இறைச்சிக்கடைகள் ஊரடங்கு காலம் முடியும் வரை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் மார்க்கெட்டுக்காக ஒதுக்கியுள்ள இடங்களுக்கு வெளியே புதிதாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.
தடையை மீறி திறந்திருந்ததாக இதுவரை மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இக்கடைகள் மட்டுமின்றி இனிமேலும் சீல் வைக்கப்பட உள்ள கடைகளும் ஊரடங்கு முடிந்த பின்னரும் அடுத்த 3 மாதங்கள் வரை திறப்பதற்கு அனுமதிக்கப்படாது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் பிரார்த்தனை செய்ய முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பிரார்த்தனையோ, தொழுகையோ, அர்ச்சனைகளோ நடந்தால் உரிய அமைப்பினர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story