search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பழகன் எம்எல்ஏ
    X
    அன்பழகன் எம்எல்ஏ

    மஞ்சள் ரேசன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும்- அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தல்

    மாநில அரசின் நிதியில் மஞ்சள் ரேசன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்க கோரி அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் சிவப்பு ரே‌ஷன் கார்டு வைத்துள்ளோருக்கு பிரதமரின் உத்தரவுப்படி வழங்க தேவையான அரிசியும், பருப்பும் மத்திய அரசின் உணவு கிடங்கில் உள்ளது. ஆனால், வழக்கம் போல் கவர்னருடன் போட்டிப் போட்டுக் கொண்டு அரசு மக்களுடைய அத்தியாவசிய தேவையை நிறைவு செய்யாமல் விளையாடி வருகின்றனர்.

    மலிவு விளம்பர அரசியலை ஆளும் அரசும், கவர்னரும் செய்து கொண்டிருப்பது உணவுப் பொருட்களை பதுக்குவதற்கு சமமான செயலாகும். மஞ்சள் கார்டுகளில் சுமார் ஒரு லட்சம் கார்டுதாரர்கள் ஏழ்மையானவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ள அதே அளவில் அரிசியும், பருப்பும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து வழங்க வேண்டும். இல்லையெனில், தனி ஒரு மனிதனாக சட்டசபை வளாகத்தில் போராடத் தயங்க மாட்டேன்.

    மாநிலம் முழுவதும் உள்ள ரே‌ஷன் கடைகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து உணவு பொருட்களை லழங்க வேண்டும். ரே‌ஷன் கடைகள் அமைந்துள்ள இடங்கள் குறுகலாக இருந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள். மைதானங்களை அரசு பயன்படுத்த வேண்டும். வீடுதேடி சென்று வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    மேலும், மளிகை பொருட்கள் விலையை தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்வதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் இது சம்பந்தமாக தனக்கு இருக்கும் அதிகாரத்தை இவ்வேளையில் உடனடியாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×