என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்று - புதுவையில் 5 ஆக உயர்வு
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற அரியாங்குப்பம், திருவண்டார் கோவில் பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 நாட்களாக புதுவை மாநிலத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை
இந்த நிலையில் மாகி பிராந்தியத்தை சேர்ந்த 71 வயது முதியவர் கொரானா அறிகுறியுடன் கண்ணூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
Next Story






