search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண் பலியானதில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    பெருந்துறை அருகே பெண் பலியானதில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த நஞ்சனபுரம் பகுதியைச் சேர்ந்த பூசப்பன், பூங்கொடி தம்பதியினரின் மகள் சத்யா என்கிற சாரதாம்பாள் (வயது 26). இவருக்கும் பெருந்துறை ஆர்.எஸ். குளத்துபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரதாம்பாள் தனது தாய் பூங்கொடி மற்றும் சகோதரியிடம் தனது கணவர் சதீஷ் தன்னை துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை சாரதாம்பாள் தனது தாய் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். அதில் எனது சாவுக்கு காரணம் எனது கணவர்தான் என்று எழுதி அனுப்பி இருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சதீஷ் வீட்டுக்கு சென்று பார்த்த போது சாரதாம்பாள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் சாரதாம்பாள் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை சாரதாம்பாள் தாய் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு வந்து தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலை வாங்க மாட்டோம் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாரதாம்பாள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடினர்.

    இதனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ராஜு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாரதாம்பாள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் அவரது உறவினர்கள் ஆர்.டி.ஓ. முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
    Next Story
    ×