search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முஸ்லிம்கள் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    முஸ்லிம்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு- முஸ்லிம்கள் போராட்டம் தீவிரம்

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கறம்பக்குடியில் முஸ்லிம்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
    கறம்பக்குடி:

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் குடிமக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், தொடர் தர்ணா போராட்டம் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கப்பட்டது. 

    இதில் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் வருவதால் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 15-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

    இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பேச்சாளர் திருச்சி வேலுசாமி, தேசிய குடிமக்கள் பதிவேட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 15-வது நாள் போராட்டத்தையொட்டி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×