என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    அரியலூரில் போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓய்வூதியத் திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும். மாதத்தின் முதல் தேதியே ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வழங்காமல் உள்ள அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதியர் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். மண்டலச்செயலாளர் ஜெயச்சந்திரன், செயலாளர் சாமிதுரை, நிர்வாகக் குழு உறுப்பினர் கருப்பையா, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வேலுசாமி, மாவட்டச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட தலைவர் ராமசாமி, சிவகொழுந்து, ராமச்சந்திரன், முனியப்பன், பச்சையப்பன், ரவிச்சந்திரன், தனபால், சூர்யகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×