என் மலர்
செய்திகள்

ஆதம்பாக்கத்தில் பெண் குழந்தை காரில் கடத்தல்
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மனைவி, மகள், 6 வயது பேத்தி ஆகியோருடன் ராயப்பேட்டை செல்வதற்காக கால்டாக்சி பதிவு செய்தனர். இன்று காலை 10 மணி அளவில் கார் வீட்டுக்கு வந்தது.
அதில் ஜான்சனின் மகள் ரெஜினா மற்றும் 6 வயது பேத்தி உட்கார்ந்திருந்தனர். ஜான்சனும் அவரது மனைவியும் வர தாமதம் ஆனது. எனவே குழந்தையை காரில் உட்கார வைத்துவிட்டு ரெஜினா வீட்டுக்குள் சென்றார்.
ஜான்சன், அவரது மனைவி, மகள் ஆகியோர் வந்தபோது கார் இல்லை. காரில் இருந்த 6 வயது பெண் குழந்தையை டிரைவர் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், குழந்தையை காரில் கடத்திய டிரைவர் பெயர் கார்த்தி என்று தெரியவந்தது. குழந்தையுடன் தப்பிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரை மடக்கி பிடிப்பதற்காக மற்ற போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டிரைவர் பிடிபடுவார். குழந்தை மீட்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.