search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதியவருக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் ராஜா.
    X
    முதியவருக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் ராஜா.

    பசியால் மயங்கி விழுந்த முதியவருக்கு உணவளித்து உதவிய சப்-இன்ஸ்பெக்டர்

    நாகை மாவட்டம் சீர்காழியில் பசியால் மயங்கி விழுந்த முதியவருக்கு சப்-இன்ஸ்பெக்டர் உணவளித்து உதவியதற்கு பொதுமக்கள் பாராட்டினர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜா(40).

    இவர் நேற்று புதிய பஸ் நிலையம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதிய பேருந்துநிலையம் பகுதி சாலையில் வழியாக நடந்து சென்ற சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த எஸ்.ஐ.ராஜா உடனே சென்று முதியவரை தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தார். பின்னர் முதியவரிடம் பரிவுடன் பேசி அவர் குறித்த தகவலையும் பசியினால் மயங்கி விழுந்ததையும் கேட்டறிந்து அவருக்கு உணவு, குடிநீரை வாங்கி கொடுத்து சாப்பிட கூறினார்.

    தொடர்ந்து அந்த முதியவரை திட்டையில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார். பணியின்போது கண் எதிரே நடந்த செயலை கண்டு சப்- இன்ஸ்பெக்டரின் மனித நேயத்தினை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாராட்டினர். காவல் உதவி ஆய்வாளரின் மனிதநேயத்தினை சீர்காழி பகுதியில் சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
    Next Story
    ×