search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்சன்
    X
    வில்சன்

    சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - கடலூரில் 3 பேர் கைது

    குமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை கடலூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
    கடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ந் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்த அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக திருவனந்தபுரம் காங்கிரஸ் பிரமுகர் ஷாகுல் நவாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகியோருக்கு உதவிய உசைன் ஷெரீப் என்பவரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் தற்போது எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனைக்கு உடந்தையாக இருந்த பிச்சைக்கனி, அமீர் மற்றும் முகமது அலி ஆகிய மூவரை, ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    காவல்துறையின் கைது நடவடிக்கையின் போது தப்பியோடிய ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர் ஷேக் தாவூத்தை போலீசார் தேடி வருகின்றனர். ஷேக் தாவூத் மீது ஐ.எஸ். அமைப்பிற்கு உதவியதற்காக என்.ஐ.ஏ. வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×