என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  சேரம்பாடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
  ஊட்டி:

  நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே உள்ள கோரஞ்சாலை சேர்ந்தவர் சதானந்தன். கனரா வங்கி ஊழியர். இவரது மனைவி ராகினி(வயது 50). இவர்களுக்கு சரிதா என்ற மகள் உள்ளார்.

  இவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி அடுத்த மாதம் 5-ந் தேதி சதானந்தன், ராகினி தம்பதியரின் மகளான சரிதாவுக்கு திருமணம் நடக்க உள்ளது. இதற்காக சதானந்தனும், ராகினியும் பத்திரிகை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து வருகின்றனர். சம்பவத்தன்று வடுவஞ்சால் பகுதியில் உள்ள உறவினர் ஒருவருக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக கணவன், மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

  அப்போது வடுவாஞ்சல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த ராகினி திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

  இதை பார்த்த அவரது கணவர் வண்டியை நிறுத்தி விட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×