என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
செந்துறை அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
செந்துறை அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
அதன்படி போலீசார் தளவாய் பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
உடனடியாக 5 மாட்டு வண்டிகளை தளவாய் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






