search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு அறை.
    X
    காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு அறை.

    காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

    காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்படும் பெண்களின் குழந்தைகள் ஓய்வு எடுக்கவும், விளையாடவும், தாய்மார்கள் பாலூட்டும் வகையிலும் குழந்தைகள் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் பெண்களின் குழந்தைகள் ஓய்வு எடுக்கவும், விளையாடவும், தாய்மார்கள் பாலூட்டும் வகையிலும் குழந்தைகள் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வழக்கு விசாரணைக்காக அழைத்துவரப்படும் பெண்களில் சிலர் குழந்தைகளுடனும், தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடனும் வருகின்றனர்.

    அவர்களை விசாரிக்கும் போது குழந்தைகளின் மனநிலை பாதிப்படையும்.

    இதனை தவிர்க்கும் நோக்கத்திலேயே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு அறை ஒதுக்கி குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்துள்ளோம். மேலும் சுவர்களில் பறவைகள், விலங்குகள் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளோம்.

    இந்த அறையில் உள்ள பிரத்யேக அறை பாலூட்டும் தாய்மார்களுக்கு வசதியாக இருக்கும். இதற்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×