என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மயிலாடுதுறையில் சோகம்- இறப்பிலும் இணை பிரியாத சகோதரர்கள்

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அண்ணன் இறந்த செய்தி கேட்டதும் தம்பி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு குருக்கள் பண்டாரத் தெரு, பெரியகுளக்கரையை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 56), ஆட்டோ டிரைவர். இவருடைய தம்பி பன்னீர்செல்வம் (50). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    உடல்நிலை மோசமானதால் பன்னீர் செல்வம் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதைகேட்ட அவரது அண்ணன் மதிவாணன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். அண்ணன் இறந்த செய்தி கேட்டதும் சிறிது நேரத்தில் தம்பி பன்னீர்செல்வமும் இறந்தார்.

    அண்ணன், தம்பி இருவரும் சாவிலும் இணை பிரியாதது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×