என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.
    X
    கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

    தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

    குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    மத்திய அரசு குடியுரிமை  சட்ட திருத்தத்தை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு வங்காளம், பீகார், உத்திரபிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் வன்முறை நீடித்து வருகிறது. பஸ் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. 

    குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்பு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதுபோல் கடலூரிலும் மாணவர்கள் இன்று  போராட்டம் நடத்தினர். 

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இன்று காலை மாணவ, மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிக்கு  வந்தனர். பின்பு அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து  விட்டு கல்லூரி வளாகத்திற்கு வந்தனர். பின்பு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திருத் தத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 
    Next Story
    ×