என் மலர்
செய்திகள்

தற்கொலை முயற்சி
திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 33) நேற்று மாலை சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் அனந்த கிருஷ்ணன் முன்னிலையில் தான் பாட்டிலில் எடுத்து வந்திருந்த பெட்ரோல் பாட்டிலில் இருந்து தன் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
உடனடியாக சப்-கலெக்டர் அலுவலக பணியாளர்கள் அவரைப் பிடித்து அவர்மீது தண்ணீரை ஊற்றி நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் பேராம்பட்டு கிராமத்தில் அவருடைய சின்ன மாமியார் கோவிந்தம்மாள் (38) நேற்று பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.
கோவிந்தம்மாளை கொலை செய்துவிட்டு தற்கொலை என கூறி நாடகமாடுகிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கூறி நான் தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
கார்த்தி மீது தற்கொலைக்கு முயன்றதாக கூறி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story