என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் மாவட்டத்தில் 600 அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்
வேலூர் மாவட்டத்திலுள்ள 13 அரசு ஆஸ்பத்திரிகள் 90 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் என மொத்தம் 600 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் உதவி டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதுதவிர மாவட்டத்திலுள்ள 13 அரசு ஆஸ்பத்திரிகள் 90 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் என மொத்தம் 600 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் பணியில் உள்ளனர். மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ வார்டு டாக்டர்கள் பணியில் உள்ளனர். ஆனால் இவர்கள் கையெழுத்திடாமல் பணி செய்து வருகின்றனர்.
இதனால் உயிர் காக்கும் மருத்துவத்தில் பிரச்சனைகள் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story