search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் இணைப்பு துண்டிக்கப்ட்ட ஸ்பின்னிங் மில்.
    X
    மின் இணைப்பு துண்டிக்கப்ட்ட ஸ்பின்னிங் மில்.

    சென்னிமலை அருகே சிப்காட் தனியார் ஆலை மின் இணைப்பு துண்டிப்பு

    சென்னிமலை அருகே சாயக்கழிவு நீரை வெளியேற்றியதால் சிப்காட் தனியார் ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகள் வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் சாய தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    இங்குள்ள ஒரு தனியார் சாய ஆலை தொழிற்சாலையில் சாய கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அந்த சாய தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை மழைநீருடன் கலந்து வெளியேற்றி வருவதாக தகவல் வந்தது.

    இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆதிகாரிகளுக்கு பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆலையை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    அதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் முத்துராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். இது குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் சாயக்கழிவு நீரை மழைநீருடன் கலந்து வெளியேற்றிய அந்த ஸ்பின்னிங் மில்ஸ் ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பு குழுவின் தலைவரும், மாவட்ட கலெக்டருமான கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் சாயக்கழிவு நீரை வெளியேற்றிய அந்த ஸ்பின்னிங் மில்லின் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×