என் மலர்
செய்திகள்

சாலையோரத்தில் இறந்து கிடக்கும் கோழிகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி கவிழ்ந்து 1000 கோழிகள் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி கவிழ்ந்து 1000 கோழிகள் உயிரிழந்தன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது.
குடியாத்தத்தைச் சேர்ந்த டிரைவர் யாசின் வண்டியை ஓட்டி வந்தார். சுங்குவாச்சத்திரம் கூட்டுச்சாலை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மினி லாரி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
விழுந்த வேகத்தில் மினி லாரி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் லாரியில் இருந்த ஆயிரம் கோழிகள் நசுங்கி இறந்தன.
டிரைவர் யாசின் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த கோழிகள் சாலை ஓரத்தில் குவியல் குவியலாக கிடக்கிறது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story