என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை கலெக்டர் அலுலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரை போலீசார் தடுத்த காட்சி.
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா சேவகன் தெருவை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 71). இவர் தனது மனைவி சின்ன பொண்ணு மற்றும் பேரக்குழந்தைகள்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
தனக்கு சொந்தமான நிலத்தை அவரது உறவினர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாகவும், அதனை மீட்டு தருமாறும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளித்துள்ளார். அந்த மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்பத்துடன் மண்எண்ணையுடன் வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடம்பில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த காவல் துறையினர் அவரிடம் இருந்து மண்எண்ணையும், அவர் குடும்பத்தையும் மீட்டு காவல் துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அவர் கொண்டு வந்த மனுவில் தனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை கொண்டு கிராம உதவியாளரின் தந்தை தனது பெயரையும், அவரது தந்தை பெயரையும் சேர்த்து கூட்டு பட்டாவாக கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
போலீசார் சோதனையை மீறி கடந்த ஜூன் மாதமும் குறைதீர் கூட்டத்திற்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீ குளிக்க முயன்றனர். மீண்டும் இதேபோன்று சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர்கள் கூறினர்.

Next Story