என் மலர்
செய்திகள்

சேதமடைந்த வீட்டை படத்தில் காணலாம்.
செந்துறையில் வீடு இடிந்து சேதம்: கணவன்- மனைவி உயிர் தப்பினர்
செந்துறையில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதில் வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி உயிர் தப்பினர்.
செந்துறை:
செந்துறை மற்றும் அதனை சுற்றி உஞ்ஜினி, பொன்பரப்பி, சிறுகடம்பூர், குழுமூர், மாத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் குளங்களில் தண்ணீர் நிறைந்தன.
இந்த மழையால் உஞ்ஜினி கிராமத்தில் காலனி தெருவில் வசித்துவரும் கணேசன் என்பவரது வீட்டின் ஒருபகுதி சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீடு இடிந்து வெளிபுறமாக விழுந்ததால் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டு இருந்த கணேசன் அவரது மனைவி இந்திராகாந்தி இருவரும் தப்பித்தனர். அருகில் உள்ளவர்களின் உதவியுடன் இடிந்த சுவர் அகற்றப்பட்டது.
Next Story






