search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன்
    X
    கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன்

    வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க நிலம் கொடுத்த கொடையாளிகள் யார்?- அமைச்சருக்கு ஈஸ்வரன் கேள்வி

    வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க நிலம் கொடுத்த 3 தர்ம பிரபுகள் கொடையாளிகள் யார் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்க வேண்டும் என ஈஸ்வரன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபியை தனி மாவட்டம் ஆக்க நான் கோரிக்கை வைக்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இதிலிருந்து ஈரோடு மாவட்டத்தை 2-ஆக பிரிக்க அவருக்கும் இங்குள்ள எம்.எல்.ஏ.க்களுக்கும் விருப்பம் இருப்பதாகவே தெரிகிறது.

    கோவை, ஈரோடு சேலம் ஆகிய பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களை வேகப்படுத்த முடியும். கோபியை தனி மாவட்டமாக பிரித்தால் கோபியை சுற்றி உள்ள மக்கள் வளர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை பிரித்துக்கொண்டு இருக்கிறார்களே அங்கெல்லாம் 100 ஏக்கர் நிலம் பெற்றுக் கொண்டு தான் பிரித்தார்களா?

    அமைச்சர் செங்கோட்டையன்

    இப்போது வேலூரை 3 ஆக பிரித்தார்களே அங்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 100 ஏக்கர் நிலம் கொடுத்த 3 தர்ம பிரபுகள் கொடையாளிகள் யார் என்று அமைச்சர் செங்கோட்டையனால் சொல்ல முடியுமா?

    ஒரு மாவட்டத்தை பிரிப்பதற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும் 100 ஏக்கர் நிலம் எதற்கு? அமைச்சர் விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×