search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரம் கோவில் குளத்தில் ஐம்பொன் சிலை மீட்பு
    X

    காஞ்சிபுரம் கோவில் குளத்தில் ஐம்பொன் சிலை மீட்பு

    காஞ்சிபுரம் கோவில் குளத்தில் மீட்கப்பட்ட பெருமாள் சிலையை போலீசார் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வதீர்த்தக் குளம் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது.

    எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் இந்த குளம் தற்போது கடும் வெயிலால் வேகமாக வறண்டு வருகிறது.

    இதையடுத்து வறண்ட குளத்தின் ஒரு பகுதியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தில் சுமார் 1 அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை கிடந்ததை கண்டு பிடித்தனர்.

    இதுபற்றி பெரிய காஞ்சிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிலையை மீட்டு விசாரணை நடத்தினர். அது பெருமாள் சிலை என்று தெரிகிறது.

    கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரகோட்டம் கோவிலில் இருந்து கச்சியப்ப சிவாச்சாரியார் சிலை ஒன்று காணாமல் போனது.

    விசாரணையில் அந்த சிலையை கோவிலின் அர்ச்சகர் கார்த்திக் என்பவர் சர்வ தீர்த்த குளத்தில் வீசியதாகத் தெரிவித்தார்.

    தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் திருக்குளத்தில் தேடிய போதும் அந்த சிலை சிக்கவில்லை.

    இந்த நிலையில் தற்போது குளத்தில் இருந்து பெருமாள் சிலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட பெருமாள் சிலையை போலீசார் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×