என் மலர்
செய்திகள்

சூளகிரி அருகே சிறுத்தைப் புலி கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலி
சூளகிரி அருகே ஆட்டுப் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை சிறுத்தைப் புலி கடித்து குதறியதில் 10 ஆடுகள் இறந்தன. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளன.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி சென்னபள்ளி ஊராட்சியை சேர்ந்தது பலவனதிம்மன பள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி போடியப்பா (வயது 70). இவர் பலரது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துசெல்லும் தொழில் செய்து வந்தார். இதில் செம்மரி ஆடுகள், வெள்ளாடுகள் என சுமார் 15 ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மேலுமலையில் இருந்து வந்த சிறுத்தைப் புலி இவரது ஆட்டுப் பட்டியில் புகுந்தது. இதில் 15 ஆடுகளை ஆவேசமாக கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் இறந்தன. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனப்பாதுகாவலர் மகேந்திரன் மர்ம விலங்குகள் நடமாடிய பகுதியில் கால் தடங்களை சேகரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தைப் புலியாக இல்லாமல் வெறிநாய்களாக இருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும், கால்நடை மருத்துவர் ஆடுகள் எப்படி இறந்தது என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றார். சோதனை முழுவதுமாக முடிவடைந்த பிறகுதான் ஆடுகள் இறந்ததன் முழுவிவரம் தெரியவரும்.
Next Story






