என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும், வீர தீர செயலுக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும். சுதந்திர தினத்தன்று இவ்விருதை முதல்வர் வழங்குவார். 

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சுயவிவரங்கள் மற்றும் விண்னப்பத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விருதுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு, சுதந்திர தினத்தன்று பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் காசோலையுடன் விருதை முதல்வர் வழங்க உள்ளார்.
    Next Story
    ×