என் மலர்
செய்திகள்

கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை - நிதி நிறுவன ஊழியர் கைது
ஈரோடு அருகே கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு பழைய பாளையம் சுத்தானந்தன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். ஜவுளிக்கடையில் மடிக்காரராக வேலை பார்த்து வந்தார். குடும்ப செலவிற்காக குமலன்குட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கினார்.
வாங்கிய கடனில் ரூ.30 ஆயிரத்தை திரும்ப செலுத்தி விட்டார். எனினும் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேலும் ரூ.30 ஆயிரம் தர வேண்டும் என்று ஸ்ரீதரிடம் அழுத்தம் கொடுத்தனர். இதன் காரணமாக கடந்த வாரம் ஸ்ரீதர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர் மற்றும் ஊழியர் என இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். உரிமையாளரும், ஊழியரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். ஆனால் உரிமையாளர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உரிமையாளரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Next Story