என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தேர்தல் பணிகளை அதிகாரி ஆய்வு
By
மாலை மலர்10 April 2019 5:49 PM GMT (Updated: 10 April 2019 5:49 PM GMT)

அரியலூர் மாவட்ட தேர்தல் பணிகளை தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணியை நேற்று அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கணினி மூலம் குழுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேப்பர் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. பேலட் பேப்பரில் 13 வேட்பாளர்கள் மற்றும் 1 நோட்டா என மொத்தம் 14 பெயர்கள் உள்ளது. இந்த பணிகளை பெல் நிறுவன பொறியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் ஆய்வு செய்து முடித்த பின்னர் மீண்டும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறையில் அவை வைக்கப்படும். பின்னர், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 17-ம் தேதி வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படும் என்றார்.
இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, தாசில்தார் குமரய்யா மற்றும் மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
×