search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருதமலை அடிவாரத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் -காவலாளி பலி
    X

    மருதமலை அடிவாரத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் -காவலாளி பலி

    கோவை மருதமலை அடிவாரத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் - காவலாளி பலியானார்கள்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை அடிவாரத்தில் தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு 3 நீச்சல் குளம் இருக்கிறது. இந்த குளத்தில் குளிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு வடவள்ளி இந்திரா நகரை சேர்ந்த கோவை பூமார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் பெரியசாமி மகன் அன்புச்செல்வன் (17), அவரது நண்பர்கள் சுதிஷ், ஆதித்யா, அஸ்வின், கவின் பரிதி ஆகியோர் நீச்சல் குளத்திற்கு குளிக்க சென்றனர்.

    அவர்கள் 7 அடி ஆழமுள்ள குளத்தில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மாணவர் அன்புச் செல்வன் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டதும் நீச்சல் குளத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் குரும்ப பாளையத்தை சேர்ந்த தேவராஜ் ஓடி வந்து மாணவர் அன்பு செல்வனை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

    இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கதறி துடித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி பலியான மாணவர் அன்புசெல்வன், காவலாளி தேவராஜ் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான அன்பு செல்வன் வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 பரீட்சை எழுதி உள்ளார். அவரது நண்பர்களும் பிளஸ்-1 எழுதி உள்ளனர்.

    இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×