என் மலர்
செய்திகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - கல்லூரி மாணவர் தற்கொலை
மாதவரம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம்:
மாதவரம் பிரகாஷ் நகரில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் கவுதம் (22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இதை பெற்றோர்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில மின் விசிறியில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம் பொன்னியம் மன்மேடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (25) அரிசி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story






