என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பாலிடெக்னிக் மாணவி கடத்தல்
    X

    புதுவையில் பாலிடெக்னிக் மாணவி கடத்தல்

    புதுவையில் பாலிடெக்னிக் மாணவி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயதுள்ள மாணவி லாஸ்பேட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டே கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அந்த மாணவி ஷாப்பிங் கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் அந்த மாணவி இல்லை.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவியுடன் ஷாப்பிங் கடையில் வேலை பார்த்து வந்த காரைக்காலை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது.

    இதனால் மாணவியை அந்த வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×