என் மலர்
செய்திகள்

சுகாதாரம், மீன்வளத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது
புதுவையில் சுகாதாரம், மீன்வளத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. #Narayanasamy
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் கீழ் உள்ள துறைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், சுகாதாரம், சுற்றுலா, மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் செயலர்கள், இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தற்போதைய நிதிநிலை, துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தற்போதைய திட்டங்களின் நிலை, திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி ஆகியவை குறித்து ஆய்வு நடந்தது. #Narayanasamy
Next Story






