என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடபழனியில் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு மின்கம்பம் தீப்பிடித்தது
    X

    வடபழனியில் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு மின்கம்பம் தீப்பிடித்தது

    வடபழனி மெட்ரோ ரெயில் நிலையம் நுழைவு வாயில் அருகே இருந்த மின்கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. #MetroTrain
    போரூர்:

    வடபழனி, 100 அடி சாலையில் மெட்ரோ நிலையம் உள்ளது. இதன் அருகே தனியார் வணிக வளாகத்துக்கு செல்லும் நுழைவு வாயில் உள்ளது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நுழைவு வாயில் அருகே இருந்த மின்கம்பம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவற்றின் மின் இணைப்புகளை துண்டித்து தீயை அணைத்தனர்.

    மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அதிகாலைநேரம் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. #MetroTrain
    Next Story
    ×