search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் தச்சு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
    X

    வில்லியனூரில் தச்சு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

    வில்லியனூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தச்சு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பாரதி நகர் ஆனந்தபுரம் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் மோகன். (வயது 40). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி.

    மோகன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோகனுக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலியால் துடித்தார். அவரது மனைவி ஜெயந்தி பக்கத்து வீட்டுக்கு சென்றார்.

    அப்போது மோகன் வலி தாங்க முடியாமல் மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜெயந்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×