என் மலர்

  செய்திகள்

  கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு தொடங்கியது
  X

  கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தொடங்கி வைத்தார். #ViralimalaiJallikattu
  தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.

  ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விரும்பினார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.  இந்த ஜல்லிக்கட்டில் 2000 மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது. 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க இருக்கிறார்கள். 2000 மாடுகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால் இந்த போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது.

  கின்னஸ் சாதனைப் படைக்க இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 8.15 மணிக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×