search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை மூக்குபொடி சித்தர் மரணம்: ஏராளமான பக்தர்கள் அஞ்சலி
    X

    திருவண்ணாமலை மூக்குபொடி சித்தர் மரணம்: ஏராளமான பக்தர்கள் அஞ்சலி

    திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த மூக்குபொடி சித்தர் இன்று வயது மூப்பு காரணமாக சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தவர் மூக்குபொடி சித்தர் (வயது 94). அஸ்டமா சித்திகள் என்று சொல்லப்படும் சித்தர்களின் வாழ்வு நிலைகளில் இறுதி நிலையில் வாழ்ந்து வந்தார். திருநேர் அண்ணாமலை காந்தி சிலை அருகில் உள்ள சன்னியாசிகள் மடம், கிரிவலப்பாதையில் உள்ள மரத்தடிகளில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக அவரது உடல் நலிவுற்று மெலிந்தது. இதனையடுத்து சேஷாத்திரி ஆசிரமத்தில் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

    மூக்குபொடி சித்தர் முக்தியடைந்ததையொட்டி சேஷாத்திரி ஆசிரமத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி அவரது உடலை வணங்கி சென்றனர். சேஷாத்திரி ஆசிரமத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ‘‘மூக்குபொடி’ சித்தரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர். ‘மூக்குபொடி’யை விரும்பி பயன்படுத்துவதால் ‘மூக்குபொடி’ சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிழக்கு ராஜபாளையம் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒரு மகன் உள்ளார். மனைவி இறந்த பிறகு ஆன்மிகத்தை தேடிச்சென்றுள்ளார். வீரபத்திரசாமியை வழிபட்டு வந்துள்ளார்.

    திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். அவர் யாரிடமும் பற்று செலுத்துவது இல்லை. தன் மகன் மற்றும் பேரப் பிள்ளைகளிடமும் அப்படித்தான் இருப்பார். அதேபோல், அவரது ஆளுமைக்குள் யாரையும் அனுமதிப்பதும் கிடையாது.

    சிதம்பரத்தில் அதிக காலம் தங்கியிருந்தார். பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருப்பார். திடீரென சாப்பிடத் தொடங்குவார்.

    புயலும், பணமதிப்பு நீக்கமும் ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் தனிமனித பிரச்சினைகளை ‘மறைபொருள்’ மூலமாக சுட்டிக்காட்டுவார்.

    ‘தானே’ புயல் வருவதற்கு முதல் நாள் மதியம் கடலூருக்குச் சென்று, கடலைப் பார்த்து, ‘அமைதியாக இரு, சத்தம் போடாதே’ என்று பேசினார். மறுநாள், தானே புயல் தாக்கியது.

    பணம் மதிப்பு நீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.500, ரூ.1000 தாள்களை கிழித்து போட்டார். கூடங்குளம் போராட்டம் தொடர்பான நிகழ்வையும் சுட்டிக்காட்டினார்.

    அவரது அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது.

    அவரை தரிசிக்க வரும் பக்தர்கள் (வெளிநாட்டினர் உட்பட) சிந்தனையில் குழப்பம் ஏதும் இல்லாமல் அமைதி ஏற்படுகிறது என்று கூறுவார்கள்’.

    ‘மூக்குபொடி’ சித்தரை டி.டி.வி. தினகரன், புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி பலமுறை சந்தித்துள்ளனர்.
    Next Story
    ×