என் மலர்

  செய்திகள்

  ஆரல்வாய்மொழியில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
  X

  ஆரல்வாய்மொழியில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்.
  நாகர்கோவில்:

  ஆரல்வாய்மொழி அருகே தோவாளை புதூரைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 30). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தற்போது கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கண்ணதாசன் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது பெயர் ரவுடிகள் பட்டியிலும் இடம் பெற்றுள்ளது. 

  தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார். கண்ணதாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார். இதையடுத்து கண்ணதாசன் நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

  இந்த ஆண்டு இதுவரை 64 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
  Next Story
  ×