என் மலர்

  செய்திகள்

  திருவாரூர் மாவட்டத்தில் மீட்பு பணிகள் தொய்வின்றி நடக்கின்றன- அமைச்சர் காமராஜ்
  X

  திருவாரூர் மாவட்டத்தில் மீட்பு பணிகள் தொய்வின்றி நடக்கின்றன- அமைச்சர் காமராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாக அமைச்சர் காமராஜ் கூறினார். #GajaCyclone
  சுந்தரக்கோட்டை:

  கஜா புயல் திருவாரூர் மாவட்ட பகுதியை கடும் சேதத்துக்கு உள்ளாக்கி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டார். அப்போது தாலுகா அலுவலக சாலை, மேலராஜவீதி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து ராஜாம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கினார்.

  அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

  பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  திருவாரூர் மாவட்டம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

  மாவட்டம் முழுவதும் 190 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 40 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

  மாவட்டத்தில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பேரிடர் மேலாண்மை துறையினர், தீயணைப்பு படை வீரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் என அனைத்து துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  மீட்பு பணிகள் தொய்வின்றி துரிதமாக நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
  Next Story
  ×