search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது என நினைத்து ஆலாவை குடித்த தொழிலாளி பலி
    X

    மது என நினைத்து ஆலாவை குடித்த தொழிலாளி பலி

    கிருமாம்பாக்கத்தில் மது என நினைத்து துணிகளை வெளுக்க வைக்கும் ஆலாவை குடித்த தொழிலாளி பலியானார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் புறக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 57). இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    தமிழரசன் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று மாலை மது குடித்து விட்டு வீட்டுக்கு மது பாட்டில் வாங்கி வந்தார்.

    மது பாட்டில் வைத்திருந்த இடத்தில் துணி வெளுக்க வைக்கும் ஆலா பாட்டில் இருந்ததால் குடிபோதையில் மது என நினைத்து ஆலா பாட்டிலை எடுத்து குடித்து விட்டார். இதில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த தமிழரசனை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×