என் மலர்
செய்திகள்

பெரியகுளம் அருகே திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் பெண் மாயம்
பெரியகுளம் அருகே திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இளம்பெண் மாயமானார்.
தேனி:
பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் தீபா (வயது 20). கல்லூரி 2-ம் ஆண்டோடு படிப்பை நிறுத்தி விட்டார். ராமசாமி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். தற்போது தீபாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்து தீபா வெளியே சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தீபாவை தேடி வருகின்றனர்.
Next Story






