search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சாலை விபத்துக்களை தவிர்க்க உயிர் அமைப்பை முதலமைச்சர்  தொடங்கி வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெளியிட்டார்.
    X
    சாலை விபத்துக்களை தவிர்க்க உயிர் அமைப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெளியிட்டார்.

    கோவையில் சாலை விபத்துக்களை தடுக்க உயிர் அமைப்பு- முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

    கோவையில் சாலை விபத்துக்களை தடுக்க உருவாக்கப்பட்ட உயிர் அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #TNCM #EdappadiPalaniswami #RoadAccident
    கோவை:

    சாலை விபத்துக்களினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த கோவையில் உயிர் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த அமைப்பின் தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி உயிர் அமைப்பை தொடங்கி வைத்தார்.

    இந்த அமைப்பின் தலைவர் சஞ்ஜெய் ஜெயவர்த்தன வேலு வரவேற்று பேசினார். நிர்வாக அறங்காவலர் கங்கா மருத்துவமனை டாக்டர். ராஜசேகரன் அறிமுக உரையாற்றினார். இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த அமைப்பின் புரவலர்களாக சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், பண்ணாரி கல்வி குழுமம் டாக்டர். பாலசுப்பிரமணியம் மற்றும் டாக்டர். சண்முகநாதன் ஆகியோர் செயலாற்றுகிறார்கள்.

    கோவையின் முக்கிய பிரமுகர்கள், முதன்மையான பெரு நிறுவனங்கள, தொழிலகங்கள் என பலர் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

    தொடக்க விழாவில் உயிர் அமைப்பின் உயிர் காக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து உயிர் சேதம் தவிர்க்க எல்லா வகையிலும் ஒத்துழைப்போம் என கோவையின் பொது நல அமைப்புகள், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஆன்மீக அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து உறுதியேற்பு எடுத்து கொள்ளும் ஸ்ரீமஹா சங்கல்பம் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தன்னார்வ அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், ஆன்மீக அமைப்பினர் கலந்து கொண்டனர். #TNCM #EdappadiPalaniswami #RoadAccident
    Next Story
    ×