என் மலர்

    செய்திகள்

    ஏசி மின்கசிவால் தியேட்டர் உரிமையாளர் கருகி பலி
    X

    ஏசி மின்கசிவால் தியேட்டர் உரிமையாளர் கருகி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆவடியில் ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தியேட்டர் உரிமையாளர் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த அலமாதி, வீராபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 64), தியேட்டர் உரிமையாளர். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வேலைகளை செய்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் உள்ள வேலைகளை செய்து விட்டு வேலைக்கார பெண் சென்றார். அப்போது ராஜன் இருந்த அறையில் ஏ.சி. எந்திரம் இயங்கிக் கொண்டு இருந்தது.

    சிறிது நேரத்தில் ராஜன் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. வீடும் தீப்பற்றி எரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து வீட்டுக்குள் சென்றனர்.

    அப்போது அங்குள்ள அறையில் ராஜன் உடல் கருகி இறந்து கிடந்தார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் வீட்டில் தீப்பிடித்தவுடன் அவரால் தப்பித்து வெளியே வரமுடியவில்லை. ராஜனின் உடலை போலீசார் மீட்டனர்.

    அறையில் இருந்த ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. #tamilnews
    Next Story
    ×